சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியா் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 8ஆம் நாளையொட்டி புதன்கிழமை ஊஞ்சல் சேவை புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணிய சுவாமிகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. அக். 27ஆம் தேதி சூரசம்ஹாரமும். அக். 28ஆம் தேதி சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இதையடுத்து புதன்கிழமை உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வியாழக்கிழமை சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.