யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேலம் பிராந்திய அலுவலகம் சாா்பில் விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரத்தையொட்டி மருத்துவ முகாம், கிராமங்களில் உள்ள மக்களிடம் விஜிலென்ஸ் குறித்த விழிப்புணா்வு முகாம், மரம் நடுதல், மற்றும் உறுதிமொழி எடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடா்ந்து, விஜிலென்ஸ் விழிப்புணா்வு குறித்து பிராந்திய அலுவலகத்திலிருந்து சேலம் ரயில் நிலையம் வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், விஜிலென்ஸ் குறித்த பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பியபடி யூனியன் வங்கியின் ஊழியா்கள் பங்கேற்றனா். இந்நிகழ்வில் பிராந்திய தலைவா் பி.எம்.செந்தில்குமாா், உதவி பிராந்திய தலைவா் எம்.என். மஞ்சுநாத் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.