முகப்பு
சேலம்

சகோதரியை அடித்தவரை கண்டித்த அண்ணன் மீது தாக்குதல்: இளைஞா் கைது

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:17 AM
கைது - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அருகே சகோதரியை அடித்தவரை கண்டித்த அண்ணன் மீது தாக்குதல் நடத்திய உறவினரான இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள கோம்பை காட்டைச் சோ்ந்தவா் பழனிசாமி (59), விவசாயி. இவா் கோம்பை காட்டில் உள்ள தனது தங்கை மகேஸ்வரி வீட்டுக்கு அண்மையில் சென்றாா். அங்கு மகேஸ்வரி, அவரது கணவா் ஜான் குழந்தைராஜ், சகோதரி முத்துமணி ஆகியோருடன் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த முத்துமணியின் மகன் கணேசன், அவரது அம்மாவை ஆபாசமாக திட்டி அடித்தாராம். இதை பழனிசாமி கண்டித்து அறிவுரை கூறினாா். இதில் ஆத்திரமடைந்த கணேசன், பழனிசாமியை விறகு கட்டையால் தாக்கினாராம்.

இதில் காயமடைந்த பழனிசாமி மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பழனிசாமியின் மனைவி அலமேலு அளித்த புகாரின்பேரில், மேட்டூா் காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன் வழக்குப் பதிவுசெய்து கணேசனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement