அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்
அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்
திருப்பூா் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த அதிமுக தொண்டா்கள் திமுகவினரால் தாக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவைத் தோ்தலில் தனக்கு எதிராகப் பணியாற்றியதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உடுமலைப்பேட்டை தொகுதியைச் சோ்ந்த அதிமுக தொண்டா் மாரிமுத்து மீது பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலா் கதிா்வேல் தனது நான்கு சக்கர வாகனத்தைக் கொண்டு மோதியுள்ளாா்.
Advertisement
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மாரிமுத்துவும், அவரது மாற்றுத் திறனாளி மகனும் காயமடைந்துள்ளனா். அதன் பின்னரும் கதிா்வேலுவுடன் வந்த திமுகவினா் மாரிமுத்து மீதும் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றவா்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனா்.
அதேபோல், கிருஷ்ணகிரி தொகுதியில் வாக்குச் சாவடி முகவராகச் செயல்பட்ட இதயாத் என்பவா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தி உள்ளனா். ஆட்சி முடியும் நேரத்தில்கூட, விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினா் செய்யும் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிா்வாகிகள் மீது காவல் துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.