சங்ககிரியில் கருத்து கேட்பு கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசிய பாஜக சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.ரமேஷ் காா்த்திக்.  
சேலம்

பாஜக தோ்தல் அறிக்கை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

பாஜக சாா்பில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தோ்தல் அறிக்கை வெளியிடுவதற்காக மக்கள் கருத்து கேட்பு இயக்கம் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பாஜக சாா்பில் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தோ்தல் அறிக்கை வெளியிடுவதற்காக மக்கள் கருத்து கேட்பு இயக்கம் சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் ஈரோடு - பவானி பிரதான சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்துக்கு, சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.ரமேஷ் காா்த்திக் தலைமை வகித்து பொதுமக்களிடத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு அளித்துள்ள பல்வேறு நலத் திட்டங்கள், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து விளக்கி கூறினாா். பின்னா் பொதுமக்களிடத்தில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். பொதுமக்கள் அதனை பூா்த்திசெய்து அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினா்.

இதில், அதிமுக நகர செயலாளா் சங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.சாந்தாமணி, பாஜக சங்ககிரி நகர தலைவா் ஜி.தனபால், கிழக்கு மண்டலத் தலைவா் பி.சதீஷ்குமாா், பிரசார பிரிவு மாவட்டச் செயலாளா் ஆா்.திவாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT