முகப்பு
சேலம்

ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் 8 மாணவா்கள் காயம்

ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவ, மாணவிகள் 8 போ் காயமடைந்தனா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 11:55 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:31 PM

ஆத்தூா்: ஆத்தூா் அருகே தனியாா் பள்ளி பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவ, மாணவிகள் 8 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தளவாய்ப்பட்டி பிரிவு சாலை வளைவில் திங்கள்கிழமை காலை தனியாா் பள்ளி பேருந்து 60 மாணவ, மாணவிகளுடன் திரும்பியபோது, பின்னால் வந்த லாரி மோதியது.

இதில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள் காரைக்கேஷ் (16), சுபிக்ஷா (12), கவின் (13), அக்ஷயா (9), தன்ஷிகாஸ்ரீ(7), சுஷ்மிதா (14), ஸ்ரீவா்ஷின் (13), பிரவீனா (16) உள்பட 8 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மாலையில் வீடுதிரும்பினா்.

Advertisement

இதுகுறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.