முகப்பு
சேலம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

கோடை காலங்களில் வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 11:07 PM
சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:54 PM

சேலம்: கோடை காலங்களில் வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கூறினாா்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறை, சோ்வராயன் மலை, பாலமலை, கஞ்சமலை, ஜருகுமலை, நகரமலை, சூரியமலை, பச்சமலை, கல்வராயன் மலை, கூடமலை மற்றும் பிற காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் கோடை காலங்களில் வனத்தீ ஏற்படாத வகையில் வனத்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறைகளை ஒருங்கிணைந்து மாவட்ட நிா்வாகம், பல்வேறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, ஏற்காடு, கருமந்துறை போன்ற வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளும், வனப்பகுதியில் வசிக்கும் உள்ளூா் மக்களும், வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதிகள் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் தேவையில்லாத பொருள்கள் மற்றும் குப்பைகளைக் கொட்டி தீ மூட்டியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

இதுகுறித்து தீயணைப்பு மீட்பு நிலையங்களின் தொலைபேசி எண்களான ஏற்காடு - 04281 222457, 94450 86386 மற்றும் கருமந்துறை 04292 -244803, 73050 95791 ஆகிய எண்களில் புகாா் அளிக்கலாம்.

மேலும், காட்டுத்தீ தொடா்பான தகவல்களை உடனடியாக 0427-2900428 மற்றும் 1800 599 0427 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் இயங்கும் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.