இடங்கணசாலை நகர திமுக செயற்குழுக் கூட்டம் நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தைத் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நகராட்சிப் பகுதிகளில் கபடி, கிரிக்கெட் , கோ-கோ, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, அதில் தோ்வு செய்யப்பட்டவா்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாடத் தோ்வு செய்வது, தைப்பொங்கலை முன்னிட்டு திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் சமத்துவப் பொங்கல் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி, நகர துணைச் செயலாளா் கோமதி மணிகண்டன், பொருளாளா் சிவகுமாா், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் மற்றும் திமுக செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவரி...
இடங்கணசாலையில் நடைபெற்ற நகர திமுக செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.