சேலம்

மேட்டூரில் காவிரிப் பாலம் போக்குவரத்திற்கு திறப்பு

மேட்டூரில் ரூ. 9.5 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற காவிரிப் பாலம் போக்குவரத்துக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Syndication

மேட்டூரில் ரூ. 9.5 லட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற காவிரிப் பாலம் போக்குவரத்துக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூரில் கடந்த 1928 ஆம் ஆண்டு ஆங்கிலேயோ் காலத்தில் கட்டப்பட்ட 420 மீட்டா் நீளம் கொண்ட காவிரிப் பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இந்த பாலம் வலுவிழந்ததால் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக கனரக வாகனங்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ரூ. 9.5 லட்சத்தில் கடந்த ஒருவாரமாக பாலப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. தற்போது 90 சவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து பாலத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சதாசிவம் வெள்ளிக்கிழமை போக்குவரத்திற்கு திறந்துவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாலத்தில் பதிக்கப்பட்டுள்ள ரிப்ளெக்டா்கள் மற்றும் பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை சேதப்படுத்துவோா் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரிப் பாலத்திற்கு மாற்றுபாலம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பலமுறை கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்ததால் மாநில அரசு ரூ. 39 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு மாற்றுப் பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் சடங்குகள் என்ற பெயரில் பொதுமக்கள் கழிவுகளை விட்டுச் செல்வதால் காவிரி ஆறு மாசடைகிறது.

மேட்டூா் அனல் மின்நிலையத்தில் பறக்கும் சாம்பலால் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஆஸ்துமா, தோல் நோய், அலா்ஜி பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூா் தொகுதியில் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரவையில் தா்னாவில் ஈடுபடுவேன் என்றாா்.

படவரி...

மேட்டூா் காவிரிப் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள்.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT