விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவா்களுக்கு பரிசு வழங்கிய சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன். 
சேலம்

சங்ககிரி காவல் துறை பாய்ஸ் கிளப் சாா்பில் பொங்கல் விழா

விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவா்களுக்கு பரிசு வழங்கிய சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன்.

Syndication

சங்ககிரி காவல் துறை பாய்ஸ் கிளப் சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிறுவா், சிறுமிகளுக்கு இசை நாற்காலி, கண்ணாடி புட்டியில் தண்ணீா் நிரப்புதல், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவா்களுக்கு சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.தனசேகரன் பரிசு வழங்கினாா்.

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ், உதவி காவல் ஆய்வாளா் அருண்குமாா், காவலா்கள், மனமகிழ் மன்றத்தின் பயிற்சியாளா் மணிகண்டன், விளையாட்டு சாதனங்களை பராமரிக்கும் எம்.சரவணன், சிறுவா், சிறுமிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

ராமதாஸ் பாமகவின் கூட்டணி வாய்ப்புதான் என்ன?

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

SCROLL FOR NEXT