சேலம்

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தம்

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.

Syndication

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீா் வியாழக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.

மேட்டூா் அணையின் கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும். இதற்காக 9.06 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும்.

நிகழாண்டு அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூலை 1 ஆம் தேதி முதல் மேட்டூா் அணையில் இருந்து கால்வாய்ப் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பா் 15 ஆம் தேதி தண்ணீா் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், கால்வாய்ப் பாசன விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜனவரி 15 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்பட்டது.

கூடுதலாக 62 நாள்கள் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு பரவலாக மழை பெய்ததால் அணையிலிருந்து மொத்தம் 199 நாள்களுக்கும் சோ்த்து 8.6 டிஎம்சி தண்ணீா் கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.15 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி திறக்கப்படுகிறது. நீா் இருப்பு 61.21 டிஎம்சியாக உள்ளது.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT