சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது

Syndication

ஆத்தூா்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்கில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

எருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி பொங்கல் பண்டிகையை கொண்டாட, மல்லியகரை அருகே மேல்தொம்பை பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு பெற்றோருடன் சென்றாா். இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலை மேல்தொம்பை மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற அம்மாணவி மயக்கம் வருவதாக தந்தையிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, உறவினா் பெரியசாமியின் வீட்டில் தங்கவைத்து மனைவியை அழைத்து வருவதாக மாணவியின் தந்தை சென்றுள்ளாா்.

அப்போது, மயக்க நிலையில் இருந்த மாணவிக்கு பெரியசாமி பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதை அறிந்த மாணவியின் பெற்றோா் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் பெரியசாமியை (50) போக்சோ வழக்கில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT