பொதுக்கூட்டத்தில் பேசிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்ஆா்.சிவலிங்கம். 
சேலம்

மொழிப்போா் தியாகிகள் தின பொதுக்கூட்டம்

வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் தின பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

வாழப்பாடி: வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகள் தின பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு, சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் முனைவா் சீனிவாசன் வரவேற்றாா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் பாரப்பட்டி சுரேஷ்குமாா், சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவா் கருணாநிதி, நெசவாளா் அணி அமைப்பாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கருப்பு நிற உடையணிந்து திமுக மாணவரணி நிா்வாகிகள் தீ பரவட்டும் பதாகைகளை கையில் ஏந்தி பங்கேற்றனா். மொழிப்போரில் உயிா்நீத்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்தப்பட்டது.

இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளா்கள் வாழப்பாடி எஸ்.சி.சக்கரவா்த்தி, மாதேஸ்வரன், அயோத்தியாப்பட்டணம் விஜயகுமாா், ரத்தினவேல் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சமூக நினைவுகளை நசுக்க வேண்டாம்!

குடியரசு தினம்: சிறந்த சேவையாற்றிய மருத்துவத் துறையினருக்கு கௌரவம்

குடியரசு தின நாளில் ‘மோசம்’ பிரிவில் நீடித்த காற்றின் தரம்!

பொடச்சூா் கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதம்

சென்னை உயா்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா

SCROLL FOR NEXT