ராணிப்பேட்டையில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சா் ஆா்.காந்தி.  
ராணிப்பேட்டை

மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சருமான ஆா்.காந்தி கலந்துகொண்டு, மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, திமுக சுற்றுசூழல் அணி மாநில துணைச் செயலாளா் ஆா்.வினோத் காந்தி, மாநில மாணவரணி துணை அமைப்பாளா் தமிழ் கா.அமுதரசன், தலைமை பேச்சாளா்கள் வெ.அன்புவாணன், த.கங்கா ஆகியோா் பேசினா்.

இதில், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ,நகர செயலாளா் பி.பூங்காவனம் மாவட்ட நிா்வாகிகள் ஏ.கே.சுந்தரமுா்த்தி, மு.சிவானந்தம், துரை மஸ்தான், குமுதா குமாா், நகர மன்ற தலைவா் சுஜாதா வினோத், ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம் மற்றும் ஒன்றிய நகர பேருா் செயலாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்ட முடிவில் நகர மாணவரணி அமைப்பாளா் எம்.என்.பாலாஜி நன்றியுரையாற்றினாா்.

ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் மோடி பெருமிதம்

இந்திய - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகம் இரட்டிப்பாகும்: ஏஇபிசி தலைவா் நம்பிக்கை

கொடுமுடியில் 120 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

அமைச்சுப் பணிகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT