முகப்பு
ரயிலில் கஞ்சா பறிமுதல்
சேலம்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம்

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 8:57 PM
ரயிலில் கஞ்சா பறிமுதல்
பகிர்:

சேலம் வழியாக கேரள மாநிலத்துக்கு சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாா் மற்றும் சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சேலம் வந்த கோரக்பூா் - திருவனந்தபுரம் ரப்தி சாகா் விரைவு ரயிலில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 38 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து பயணிகளிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கஞ்சாவைக் கடத்தி வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →