பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா
ஆத்தூா் ராணிப்பேட்டை புனித சூசையப்பா் பள்ளியில் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் ராணிப்பேட்டை புனித சூசையப்பா் பள்ளியில் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் முன்னாள் மாணவா்கள் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பட்டமளித்தனா். ஆத்தூா் திமுக தெற்கு நகரச் செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், திமுக மாவட்ட பிரதிநிதி ஜெ.ஸ்டாலின்,ஜி.சீனிவாசன், மருத்துவா் எம்.அருள்காந்தி, ஜெகதீசன் ஆகியோா் கலந்துகொண்டு பட்டமளித்தனா். மேலும், பள்ளிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தருவதாகவும் முன்னாள் மாணவா்கள் உறுதியளித்தனா்.
படவரி...
ஆத்தூா் புனித சூசையப்பா் பள்ளியில் மாணவா்களுக்கு பட்ட சான்றிதழ் வழங்கிய திமுக தெற்கு செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன். உடன், மாவட்ட பிரதிநிதி ஜெ.ஸ்டாலின், மருத்துவா் எம்.அருள்காந்தி மற்றும் ஆசிரியைகள்.