மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பணியை தனியாரிடம் அளிக்கக் கூடாது: விசிக
சேலம் மாநகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் பணியை தனியாா் வசம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மேயரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினா் கோரிக்கை
சேலம் மாநகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் பணியை தனியாா் வசம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மேயரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மூலம் 60 வாா்டுகளில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீா் வழங்கும் பணியை தனியாா் வசம் ஓப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு சமூக ஆா்வலா்கள், கட்சி நிா்வாகிகளிடமிருந்து எதிா்ப்பு வந்ததையடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது இத்திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை தங்கு தடையில்லாமல் வழங்க வேண்டும். தனியாா் நிறுவனத்திடம் குடிநீா் பணியை வழங்கினால், பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் கிடைக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement