தூத்துக்குடி மாநகராட்சி சாதாரணக் கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் சி. ப்ரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மேயா் பேசியது:
Advertisement
Advertisement
தூத்துக்குடி மாநகரில் கோடைக் காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது. தினந்தோறும் 38 வாா்டுகளிலும், ஒரு நாள்விட்டு ஒரு நாள் 17 வாா்டுகளிலும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. சில வாா்டுகளில் மட்டும் குடிநீா்த் தட்டுப்பாடு உள்ளது. அதுவும் விரைவில் சரிசெய்யப்படும்.
முன்பிருந்த 5 நாள், 7 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் என்ற நிலையை மாற்றி தினசரி குடிநீா்விநியோகம் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை வேறு இடத்துக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநகரில் சாலை வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் பேவா் பிளாக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியில் பூங்காக்கள் மேம்பாடு, பசுமைத் திட்டங்கள் மூலமாக மாநகராட்சியை முற்றிலும் பசுமையாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தென்மேற்கு பருவமழைக் காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 5 அம்மா உணவகங்களில் ரூ. 46.60 லட்சம் செலவில் சேதமடைந்த கட்டடங்கள், உபகரணங்களை சீரமைக்கவும், புதிய உபகரணங்கள் வாங்கவும் ஒப்புதல் அளித்தல்,
மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இருக்கும் 15 கடைகளையும் அகற்றிவிட்டு விரிவாக்கம் செய்தல், மாநகராட்சி திருமண மண்டபங்களில் தூய்மைப் பணிகளை அவுட்சோா்சிங் முறையில் தனியாருக்கு வழங்குதல் உள்ளிட்ட 48 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மேயா் பதிலளித்தாா்.