அரசுப் பாட நூலுக்கான அச்சுக் கூலி உயர்த்தப்படுமா?
சிவ காசி, டிச.24:தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவனத் துக் குத் தேவை யான பள் ளிப் பாடப் புத்தகங்கள் சிவகாசி யில் அச்சிடப்படு கின்றன.இப் பணிக்கு தமிழக அரசு கூலியை உயர்த் தித் தர வேண் டும் என அச்சக உரிமைய
சிவ காசி, டிச.24:தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவனத் துக் குத் தேவை யான பள் ளிப் பாடப் புத்தகங்கள் சிவகாசி யில் அச்சிடப்படு கின்றன.இப் பணிக்கு தமிழக அரசு கூலியை உயர்த் தித் தர வேண் டும் என அச்சக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவனம் சார் பில் முத லாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக் கும் மாண வர்க ளுக்கு ஒவ் வொரு ஆண் டும் நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படு கின்றன.சமச் சீர் கல் வித் திட்டத் திற்கு புத்தகம் அச்ச டிக் கும் பணி தொடங்கப்பட வில்லை.வழக்க மாக வழங்கப்ப டும் புத்தகங்களே தற் போது அச்சிடப்படு கின்றன.
புத்தகம் அச்ச டிக்க,தமிழக அரசு காகிதம் மற் றும் அட்டை வழங்கி விடும்.
அதில் அச்ச டித்து புத்தகமாகத் தயா ரித்து அச்சகத் தார் கொடுக்க வேண் டும்.
இந்தப் பணியானது அரசு நிர்ணயம் செய் யும் கூலிப் படி ஒப்பந்த முறை யில் நடைபெ றும்.
சிவகாசி யில் சுமார் 25 ஆப் செட் அச்சகங்களி லும், சென்னை யில் சுமார் 55 வெப் ஆப் செட் அச்சகங்களி லும் புத்தகம் அச்சி டும் பணி நடை பெற்று வருகிறது.
காகிதத்தை,அச்சகங்க ளுக் குக் கொண்டு வருவ தும், புத்தகம் அச்ச டித்த பின்னர் அரசு சேமிப் புக் கிடங் குக் குக் கொண்டு சேர்ப்ப தும் அச்சகத்தா ரின் பணியா கும். ஒவ் வொரு ஆண் டும் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண் டும்.கடந்த ஆண்டு பெறப்பட்ட ஒப்பந்தத் தின்படி,2009 ஜூன் மாதம் வரை புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
அப் போது,வரும் கல்வி ஆண் டுக் குத் தேவை யான புத்தகங்கள் 40 சதம் அச்சிடப்பட்டி ருந்தன.இதைய டுத்து, ஜூலை மாதம்,வழக்க மாக வழங் கும் கூலி யைக் குறைத்து அரசு ஒப்பந்தம் கோரியது.இந்தக் கூலியை ஏற் றுக் கொள் ளாத அச்சக உரிமையாளர்கள் புத்தகம் அச்ச டிக்க மறுத்து விட்டனர்.
இதைய டுத்து,பள்ளி கல் வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மற் றும் சிவ காசி அச் சக உரிமையாளர்களுடன் மூன்று கட்டப் பேச்சு வார்த்தை நடத்தி னார்.வழக்க மான கூலி வழங்கப்ப டும்.வருங்காலத் தில் கூலியை உயத்தி வழங்க அரசு பரிசீ லிக் கும் என அமைச்சர் கூறியதைய டுத்து, புத்தகம் அச்ச டிக்க,அச்சகத் தார் ஒப்பந்தம் பெற்றனர்.
தற் போது பாடப் புத்தகங்கள் அச்ச டிக் கும் பணி சிவகாசி யில் தீவிர மாக நடை பெற்று வருகிறது.
இதுகு றித்து, சிவகாசி யில் தமிழக அர சின் பாடப் புத் தகங்களை அச்ச டிக் கும் பணி யில் ஈடுபட் டுள்ள அச்சக உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
அச்சு மை விலை உயர்ந்து விட்டது. தொழிலாளர்க ளுக்கு சம்பளம் உயர்த்தப்பட் டுள்ளது.எனி னும்,அரசு புத்தகம் அச்ச டிப்பதற் கான கூலியை உயர்த்தி வழங்க வில்லை.
தற் போது ஒரு ரீம் காகிதத் தில் முன் னும் பின் னும் ஒரு கல ரில் அச் சிட கூலி 50 ரூபா யும், நான்கு கலர் பிரிண்ட் செய்ய ரீம் ஒன் றுக்கு 55 ரூபா யும் அரசு வழங்கி வருகிறது.
புத்தகம் பைண் டிங் செய்ய ஒரு பாரத் துக்கு அரசு இரண்டே முக் கால் பைசா வழங்குகிறது.ஆனால்,ஒரு பாரம் பைண் டிங் செய்ய கூலி நான்கு பைசா கொடுக்க வேண்டி யுள்ளது.(ஒரு புத்தகத் துக்கு சுமார் 18 பாரம் வரை இருக் கும்).இத னால் அச் சக உரிமையாளர்க ளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.எங்களது நிலையை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூறி யுள் ளோம்.
தற் போது ஒரு கலர் பிரிண்ட் செய்ய ரூபாய் 50 வழங்குவதை ரூபாய் 80 ஆக உயர்த்தி வழங்க வேண் டும். புத்தகம் பைண்ட் செய்ய ஒரு பாரத் துக்கு நான்கு பைசா வழங்க வேண் டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத் துள் ளோம்.அமைச்சர் பரிசீலனை செய்வதாகக் கூறி யுள் ளார் என் றார்.