முகப்பு
மதுரை

உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததால் அவதியுறும் பயணிகள்

போடி, அக். 27:   போதிய பணியாளர்கள் இன்றி போடியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.   போடி, தேவாரம் ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகக்

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:06 PM
பகிர்:

போடி, அக். 27:   போதிய பணியாளர்கள் இன்றி போடியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

  போடி, தேவாரம் ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை அலுவலகங்கள் உள்ளன. போடியில் இருந்து தேனி, திண்டுக்கல், திருச்சி, சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், திருச்செந்தூர், ராமேசுவரம், கம்பம், குமுளி, உத்தமபாளையம், பெரியகுளம், கேரளத்தைச் சேர்ந்த மூணாறு, நெடுங்கண்டம், ராஜாக்காடு, சாந்தான்பாறை உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  இதேபோல், போடியைச் சுற்றி குரங்கணி, முந்தல் ஆகிய மலை கிராமங்களுக்கும், மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, காமராஜபுரம், சின்னமனூர், தேவாரம், அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  போடி அரசுப் போக்குவரத்துக் கழக டெப்போவில் 65-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் 420-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிகின்றனர்.

  தேவாரம் போக்குவரத்துக் கழக டெப்போ மூலம் பாளையம், போடி, கம்பம், சின்னமனூர் உள்பட பல்வேறு ஊர்களுக்குப் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  இதில் பல பஸ்கள் சரியான நேரத்துக்கு வராததாலும், சில சமயம் சில வழித்தடங்களில் பஸ்களே இயக்கப்படாததாலும் பொதுமக்கள் போடி பஸ் நிலையத்தில் காத்திருக்கும் நிலை இருந்தது.

  இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, போடி போக்குவரத்துப் பணிமனையில் உள்ள தொழிலாளர்களில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆன் டூட்டி முறையில் சென்று விடுகின்றனர். அதாவது தொழிற்சங்க நிர்வாகிகள் என்ற பெயரில் அவர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைத்து விடுகிறது. இதனால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

  இதற்காக போடியில் உள்ள டெப்போவில் பணிக்கு வரும் தொழிலாளர்களை கூடுதல் நேரம் (ர்ஸ்ங்ழ் ற்ண்ம்ங்) பணிபுரியுமாறு வலியுறுத்துகின்றனர். இதற்குத் தொழிலாளர்கள் தயாராக இருந்தாலும், அதற்கு உரிய ஊதியம் தருவதில்லை.

  தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தின் அடிப்படையில் 8 மணி நேரப் பணிக்கு சராசரியாக ரூ. 500 வழங்க வேண்டும். ஆனால், தற்போது டிரைவருக்கு அதிகபட்சமாக ரூ. 200-ம், கண்டக்டருக்கு அதிகபட்சமாக ரூ. 195-ம், புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 150 மட்டுமே கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான ஊதியமாக வழங்குகின்றனர்.

  இதனால் பல தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிய மறுத்து விடுகின்றனர். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பஸ்களை இயக்கத் தொழிலாளர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது. நெடுந்தூர பஸ்கள் தாமதமாகச் செல்லும் நிலையும், நகர பஸ்களில் சில நடை பயணங்கள் கட்டாகும் நிலையும் உள்ளது என்றனர்.

  கடந்த சனிக்கிழமை உரிய நேரத்தில் பஸ்கள் வராததால், போடி அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் பஸ்ûஸ சிறை பிடித்தனர்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக போடி கிளை மேலாளர் தியாகராஜனிடம் கேட்டதற்கு, ஆன் டூட்டி என்பது மத்திய சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே சில நேரங்களில் வழங்குகிறோம். அதனால் பணியாளர்கள் பற்றாக்குறை எனச் சொல்வது தவறு. பல தொழிலாளர்கள் வயது காரணமாகவும், நோயுற்ற நிலையிலும் விடுப்பு எடுத்து விடுகின்றனர். இதனால் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

  அதே சமயம், மற்ற தொழிலாளர்களை ஓவர் டைம் டூட்டி பார்க்கச் சொல்லி சமாளிக்கிறோம். ஓவர்டைம் டூட்டி பார்க்கும் தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக் கழகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை கொடுக்கிறோம். இது குறைவாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் போக்குவரத்துக் கழகத்திடம்தான் முறையிட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.