மதுரை

புறநகரில் 3 ஆண்டில் சாலை விபத்தில் 1493 பேர் சாவு

மதுரை, ஜூன் 13: மதுரை புறநகரில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 1493 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பஸ்கள், லாரிகள் விபத்துக்கு உள்ளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 5 மாதங்களில் 43

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூன் 13: மதுரை புறநகரில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 1493 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பஸ்கள், லாரிகள் விபத்துக்கு உள்ளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 5 மாதங்களில் 43 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  மதுரை புறநகரில் 2007-ல் 1750 பெரிய விபத்துகள் நடந்துள்ளன. இதில் 360 விபத்துகளில் 390 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் பலத்த காயமும், 96 பேர் சிறிய காயமும் அடைந்துள்ளனர். 1268 சிறிய விபத்துகளில் 1884 பேர் காயமடைந்துள்ளனர். காயத்தை ஏற்படுத்தாத வகையில் 182 விபத்துகள் நடந்துள்ளன.

  இதில் அரசு பஸ்கள் 245, தனியார் பஸ்கள் 124, லாரிகள் 294, டிராக்டர் 42, கார் 283 மற்றும் மோட்டார் சைக்கிள்கள் 347 என விபத்துக்கு காரணமாயிருப்பதும் தெரியவந்துள்ளது.

   2008-ல் 1732 பெரிய விபத்துகள் நடந்துள்ளன. இதில் 381 விபத்துகளில் 410 பேர் இறந்துள்ளனர். 126 பேர் உறுப்புகளை இழந்து காயமடைந்துள்ளனர். 1085 பேர் சிறுகாயத்துடன் தப்பியுள்ளனர்.  வாகனச் சேதத்துடன் 140 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 229 அரசு பஸ்கள், 286 லாரிகள் விபத்துக்கு காரணமாக இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

   2009-ல் 1836 பெரிய விபத்துகள் நடந்துள்ளன. இதில் 451 விபத்துகளில் 519 பேர் உயிரிழந்துள்ளனர். 21 விபத்துகளில் 35 பேருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 1770 விபத்துகளில் 2105 பேர் லேசான காயமடைந்துள்ளனர். 94 விபத்துகளில் வாகனங்கள் மட்டும் சேதமடைந்துள்ளன. இந்த ஆண்டில் 216 அரசு பஸ்கள், 281 லாரிகள் விபத்துக்குள்ளாகி உள்ளன.

   நடப்பாண்டான 2010 ஜனவரி முதல் மே வரையில் 88 பெரிய விபத்துகள் நடந்துள்ளன. இதில் 225 விபத்துகளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். 18 வழக்கில் 20 பேர் பலத்த காயத்துடன் தப்பியுள்ளனர். 609 விபத்துகளில் 1053 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.  37 விபத்துகளில் வாகனங்கள் மட்டும் சேதமடைந்துள்ளன. கடந்த 5 மாதங்களில்  நடந்த விபத்துகளில் 133 லாரிகளாலும், 92 விபத்துகள் அரசு பஸ்களாலும் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

  புறநகரில் மேலூர், கொட்டாம்பட்டி, பாண்டன்குடி விலக்கு, விநாயகபுரம் முனிக்கோயில் வளைவு, திருப்பரங்குன்றம் மூலக்கரை, வலையங்குளம் அருகே உள்ள பரம்புபட்டி, அவனியாபுரத்தை அடுத்த மண்டேலா நகர், திருநகர் 3-வது பஸ் நிறுத்தம், திருமங்கம் குதிரைச்சாரிகுளம், சிவரக்கோட்டை, கப்பலூர் பாலம், உசிலம்பட்டி, புளியங்குளம், வாடிக்கருப்புகோயில், கொங்கபட்டி, தொட்டப்ப நாயக்கனூர், சமயநல்லூர் ஆண்டிப்பட்டி பங்களா ஆகியன அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

  விபத்துக்கு காரணம்: விபத்துக்கு அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களே காரணம் எனத் தெரியவந்துள்ளது. 2008-ல் 3,852 வழக்குகள், 2009-ல் 5242 வழக்குகளும், 2010 மே வரையில் 2700 வழக்குகள் அதிக வேகமாகச் சென்ற வாகனங்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.

   சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 2008 -ல் 1808, 2009 -ல் 2612, 2010 மே வரையில் 1177 வழக்குகள் அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பெரிய வாகனங்களுக்கு அடுத்தபடியாக இருசக்கர வாகனங்களில் குடிபோதையில் செல்வோராலும் விபத்துகள் அடிக்கடி நடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து குடி போதையில் வாகனங்களை ஓட்டியதாக 2007-ல் 1553, 2008-ல் 1510, 2009-ல் 6562, கடந்த 5 மாதங்களில் 2750 என வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகத் தொடர்ந்த வழக்கில் கடந்த 2008 -ல் 673 பேரும், 2009-ல் 2847 பேரும், கடந்த 5 மாதங்களில் 1207 பேரும் நீதிமன்றத்தில் அபராதம்,தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 120 பேரின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் 43 பேரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இவர்கள் மேல்முறையீடுக்குப் பிறகே

லைசென்ஸ் பெற முடியும். மேலும் 77 பேரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட உள்ளது என புறநகர் போக்குவரத்து பிரிவு போலீஸôர் தெரிவித்தனர்.

  எஸ்.பி. பேட்டி: மதுரை புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக விபத்து அதிகரித்து வருவது குறித்து போலீஸ் எஸ்.பி. எம்.மனோகரனிடம் கேட்டபோது, அவர் கூறியது:

  விபத்துகள் அதிகமாக உள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிப்பதுடன் சட்டப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 விபத்துகள் அடிக்கடி நடைபெறும் பகுதிகளில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மதுரை புறநகர் பகுதியை விபத்து இல்லா பகுதியாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது  அவசியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT