மதுரை

மதுரையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள்: 2 ஆண்டுகளில் 267 பேர் சாவு

மதுரை, மார்ச் 3: மதுரையில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டும் 90}க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது

ஜெயப்பாண்டி

மதுரை, மார்ச் 3: மதுரையில் கடந்த 2 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மட்டும் 90}க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை நகரில் கடந்த 2008}ல் மொத்தம் 665 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 142 பேர் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிள் விபத்தில் 48 பேரும், அரசு பஸ் மோதிய விபத்தில் 33 பேரும், லாரி மோதி 16 பேரும், நடந்து சென்றபோது வாகனம் மோதி 43 பேரும் உயிரிழந்துள்ளனர். போதையில் நடந்து செல்லும்போது தள்ளாடி விழுந்து இறந்தோர் 15 பேர்.

பகல் 11 மணி முதல் 12 வரை 35, 12 மணி முதல் 1 மணி வரை 48, பிற்பகல் 2 முதல் மாலை 3 வரை 40, மாலை 4 முதல் 5 வரை 50, 5 முதல் 6 வரை 43, 6 முதல் இரவு 7 வரை 36 எனவும் விபத்துகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு விபத்துகள்: கடந்த 2009 ஆம் ஆண்டில் மதுரையில் 555 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு பஸ் மோதி 26 பேரும், லாரி மோதி 15 பேரும், மோட்டார் சைக்கிள் விபத்தில் 23 பேரும், சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதி 46 பேரும் உயிரிழந்துள்ளனர். தாங்களாக விழுந்து 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2009 }ல் காலை 10 முதல் 11 வரை 25, பகல் 11 முதல் 12 வரை 36, பகல் 12 முதல் 1 வரை 36, பகல் 1 முதல் பிற்பகல் 2 வரை 26, பிற்பகல் 2 முதல் மாலை 3 வரை 45, மாலை 4 முதல் 5 வரை 43, மாலை 5 முதல் இரவு 7 மணி வரை 50 என விபத்துகள் பதிவாகி உள்ளன.

காலையில் கல்வி நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகப் பணிக்குச் செல்லும்போதும், பின்னர் மாலையில் திரும்பும் நேரத்திலும்தான் பெரும்பாலும் விபத்துகள் நடைபெறுகின்றன.

சாலைகள்: நகரில் கடந்த 2008 }ல் காமராஜர் சாலையில் 35 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15 பேர் இறந்துள்ளனர்.

பைபாஸ் சாலையில் 60 விபத்துகளில் 15 பேர் இறந்துள்ளனர். மதுரை } திருப்பரங்குன்றம் சாலையில் 50 விபத்துகளில் 15 பேரும், அழகர்கோவில் சாலையில் 52 விபத்துகளில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் காமராஜர் சாலையில் நடந்த 27 விபத்துகளில் 7 பேரும், பைபாஸ் சாலையில் 33 விபத்துகளில் 8 பேரும், மதுரை } திருப்பரங்குன்றம் சாலையில் 52 விபத்துகளில் 10 பேரும் அழகர்கோவில் சாலையில் 45 விபத்துகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாகப் போலீஸôர் கூறுகின்றனர்.

2010 நிலவரம்: பிப்ரவரி வரை நகரில் 15 விபத்துகள் நடந்துள்ளதாகவும், அதில் 13 பேர் இறந்துள்ளதாகவும் போக்குவரத்துப் போலீஸôர் கூறுகின்றனர். விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் 25 வயது முதல் 40 வயதுக்குள்ளானவர்கள்.

இதுகுறித்து மாநகர் போலீஸ் கமிஷனர் பி. பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியது:

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்கி அதிகமாக உயிரிழக்கின்றனர். எனவே கல்வி நிலையங்கள் மூலம் மாணவர்களை ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறோம்.

நகரில் தினமும் 10 பேர் மீது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குப் பதிவாகிறது. சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில், போதையில் வாகனம் ஓட்டியதாக குறைந்தது 75 வழக்குகள் பதிவாகின்றன.

எனவே ஹெல்மெட் அணிவது, போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் விபத்தை குறைக்கலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT