செப். 20: மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 20 நாள்களில் மட்டும் 275 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும்
நகர், புறநகர் பகுதியில் 3 இரட்டைக் கொலை உள்ளிட்ட 10 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
மதுரை நகரில் ரிசர்வ்லைன் பகுதி பாதுகாப்பானதாகக் கருதப்படும் முக்கியப் பகுதியாகும். மாவட்ட ஆட்சியர், போலீஸ் தென்மண்டல ஐ.ஜி. அலுவல
கம், மாவட்ட எஸ்.பி. குடியிருப்பு மற்றும் போலீஸ் துணை கமிஷனர்கள் என முக்கியப் பிரமுகர்கள் குடியிருப்பதுடன், ஆயுதப்படை போலீஸ் மைதானம் உள்ளி
ட்டவையும் அப்பகுதியில்தான் உள்ளன.
பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில்தான், கடந்த வாரம் ஓய்வுபெற்ற வருமானவரித் துறை அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 130 பவுன் தங்க
நகைகளையும், ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் தனியாக
வசித்துவந்த பெண்ணின் வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
போடியைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் பஸ்ஸில் வந்தபோது செக்கானூரணி அருகே 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. கடந்த வாரம்,
திருப்பரங்குன்றம் அருகே நின்றிருந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பிளேடுகள் திருடப்பட்டுள்ளன. அதே பகுதியில், மருந்துக் கடை அ
திபர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
சோழவந்தான், திருவேடகம் பகுதியில் கடந்த வாரம் பெருமாள் கோயிலில் பல லட்சம் மதிப்புள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன. மேலூர், சூரக்
குண்டு பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் தொடர்ந்து 3 வீடுகளில் கொள்ளை நடந்து, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடப்
பட்டுள்ளன.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 20 நாள்களில் மட்டும், சுமார் 275 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இதன் மொத்த மதிப்பு ரூ. 35 லட்சத்துக்கும் மேலாக இருக்கும் என்பதும் போலீஸôரின் கருத்தாகும்.
புறநகரில் கடந்த 20 நாளில் 10 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக போலீஸôர் தெரிவிக்கின்றனர். இதில் ஒரு பெண் அடையாளம் தெரியாத அள
வுக்கு உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நகர் நிலவரம்: மதுரை நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக வழிப்பறிச் சம்பவத்தை போலீஸôர் கட்டுப்படுத்தி உள்ளனர். எனினும் 4 சம்பவங்களில்
சுமார் 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. வழிப்பறிச் சம்பவத்தில் 15 பவுன் நகைகள் மர்ம நபரால் பறிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் தெற்குவாசல் போலீஸ் நிலையப் பகுதியில் நடந்துசென்ற பெண்ணிடம், மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதை தகராறில் முனிச்சாலை, சோலையழகுபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் இருவர் கொல்லப்பட்டனர். பெரியார் பஸ்நிலையம்
முன் அடகுக்கடைக்காரர் கொலை, ஆரப்பாளையம் பெண் கொலை என கடந்த 20 நாளில் 3 கொலைச் சம்பவங்கள் நடந்தாலும் அதில் குற்றவாளிகளை
போலீஸôர் கைது செய்திருப்பது ஆறுதலை அளிப்பதாக உள்ளது.
நகரில் தினமும் குறைந்தது 4 இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவை தொடர்பாக உடனடியாக
வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
போக்குவரத்தைச் சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்தும் போலீஸôர் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதிலும் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் எதிர்
பார்க்கின்றனர்.
நகரில் போலீஸôர் அடிக்கடி வாகனச் சோதனையில் ஈடுபட்டும், இரவு ரோந்து அதிகரித்திருப்பதும், புறக்காவல் நிலையங்களைத் திறந்திருப்பதும் குற்றங்
கள் குறைய வழிவகுத்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புறநகரில் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்ன?
புறநகரில் போலீஸ் பற்றாக்குறை காரணமாக வாகனச் சோதனை, இரவு ரோந்து மேற்கொள்ளப்படாததால் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதி
கரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சம்பவங்களில் கைது செய்யப்படுவோரை விடுவிக்குமாறு அரசியல் தலையீடும் அதிகமாக இருப்பதால் விசாரணைகள் பாதிக்கப்படுவதாக
போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
புறநகரில் குறிப்பாக அவனியாபுரம், ஊமச்சிகுளம், திருப்பரங்குன்றம், திருநகர், பழங்காநத்தம், அழகப்பன் நகர் ஆகிய பகுதிகளில் குற்றங்கள் அதிகம் நடை
பெறுவதும் தெரியவந்துள்ளது. இந்தப் பகுதிகள் மதுரை நகர் எல்லையை ஒட்டியதாக இருப்பதால், புறநகர், மாநகர் போலீஸôர் இணைந்து கூட்டு
நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் போலீஸôர் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.