கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக 7 பேர் மீது வழக்கு
காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேரைப்
காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் 7 பேரைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.
மாந்தோப்பு ஊராட்சிக்குள்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவேல மரங்களை மாந்தோப்பைச் சேர்ந்த நாகு, மாரிமுத்து, மதுரைவீரன், தவமணி, கர்ணன், ரவி, சங்கிலி ஆசாரி ஆகிய 7 பேரும் சேர்ந்து வெட்டிக் கடத்தியாக ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாதன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுபற்றி போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.