முகப்பு
மதுரை

அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

காரைக்குடி, ஜன. 8:  காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. நிதியில் ரூ. 10.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை மத்திய உள்துறை அமைச்சர

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

காரைக்குடி, ஜன. 8:  காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. நிதியில் ரூ. 10.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சனிக்கிழமை திறந்துவைத்தார்.

2008-2009 ஆம் ஆண்டிற்கான சிவகங்கை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4.90 லட்சம் மதிப்பீட்டிலும், 2009-2010 ஆம் ஆண்டிற்கான காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பீட்டிலும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டடங்களை அமைச்சர் ப. சிதம்பரம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் என். சுந்தரம், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேது. சுடலைமுத்து, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப. முத்துராமலிங்கம், சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம். ராஜரெத்தினம்.

 அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வாணையர் வி. மாணிக்கவாசகம், கல்லூரிகள் வளர்ச்சிக் குழும முதன்மையர் டிஆர். குருமூர்த்தி, பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.                     

முழு கட்டுரையைப் படிக்க →