சிவகாசியில் தினசரி சுமார் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வீண் குழாய் உடைப்பைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகாசி, செப். 13: சிவகாசியில் தினசரி சுமார் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக வெம
சிவகாசி, செப். 13: சிவகாசியில் தினசரி சுமார் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி நகருக்கு குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணைக்கட்டு உள்ளது. இந்த அணை வறண்டு சில மாதம் ஆகிவிட்டது. தற்போது அணை பகுதியில் கிணறுகள், உறைகிணறுகள் அமைத்து தினசரி சுமார் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.
மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தினசரி 30 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.
Advertisement
சிவகாசி நகருக்கு தினமும் 65 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. தற்போது தண்ணீர் தட்டுப்பாடால் 6 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறு.
இந் நிலையில், செவல்பட்டி, சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம் அருகே, சிவகாசி-வெள்ளையாபுரம் ரயில்வே கேட் அருகே, பெரியகுளம் கண்மாய் கட்டளைப்படி சாலை அருகே, திருத்தங்கல்-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் இரு இடத்திலும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் குடங்களில் அந்தத் தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். இந்த உடைப்புகள் மூலம் தினசரி சுமார் 4 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.
குடிநீர் தட்டுப்பாடு உள்ள இந்நேரத்தில் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து நகராட்சிப் பொறியாளர் முருகனிடம் கேட்டபோது, குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.