சித்திரைத் திருவிழா: அழகர்கோவில் உண்டியல் வருவாய் ரூ.49 லட்சம்
அழகர்கோவிலில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் மதுரை வந்து திரும்பியதில், பக்தர்கள் அளித்துள்ள உண்டியல் காணிக்கையாக ரூ. 49.51 லட்சம் கிடைத்துள்ளது
அழகர்கோவிலில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் மதுரை வந்து திரும்பியதில், பக்தர்கள் அளித்துள்ள உண்டியல் காணிக்கையாக ரூ. 49.51 லட்சம் கிடைத்துள்ளது.
சித்திரைத் திருவிழாவுக்கு அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகருடன் 20-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளில் உண்டியல்களும் மதுரைக்கு வருகின்றன. இந்நிலையில், திருவிழா முடிந்து அழகர்கோவிலுக்கு கொண்டுவரப்படும் உண்டியல்கள், திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன. உண்டியல்களில் ரூ. 49.51 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம் 66 கிராம், வெள்ளி 122 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இது கடந்த ஆண்டு உண்டியல் வருமானத்தை விட ரூ. 2.50 லட்சம் அதிகமாகும் என, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement