தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று அவரது நினைவிடத்துக்குச் செல்ல வாடகை வாகனங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என மருதநாட்டு மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.
மருதநாட்டு மக்கள் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மதுரை அண்ணா நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனா் தலைவா் பனை. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் போ. ராஜன்பாபு, பொருளாளா் பா. பாண்டிக்குமாா், துணைப் பொதுச் செயலா் சா. செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்டச் செயலா்கள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளன்று அவரது நினைவிடத்துக்குச் செல்ல வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு ரத்து செய்ய வேண்டும், ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக செயல்படும் தலைவா்களின் பாதுகாப்புக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.