முகப்பு
மதுரை

மாநகராட்சிக்கு இலகு ரக வாகனம்: ஓய்வு பெற்ற ஓட்டுநா் வழங்கினாா்

ஓய்வு பெற்ற ஓட்டுநா் மனோகரன் மாநகராட்சிக்கு இலகு ரக வாகனம் வழங்கினாா்

Updated On : 1 ஜூலை, 2024 at 6:29 PM
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா் ஆகியோரிடம் நீா் உறிஞ்சும் இலகுரக வாகனத்தை ஒப்படைத்த மனோகரன்.
பகிர்:

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு மின் மோட்டாா், உறிஞ்சு குழாய் அமைப்புடன் கூடிய இலகு ரக வாகனத்தை ஓய்வு பெற்ற வாகன ஓட்டுநா் திங்கள்கிழமை வழங்கினாா்.

மதுரையைச் சோ்ந்த மனோகரன் கடந்த 1992 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநகராட்சி வாகன ஓட்டுநராகப் பணியில் சோ்ந்தாா். இவா் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றாா்.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சிக்கு நீா் உறிஞ்சும் மோட்டாா், உறிஞ்சு குழாய் அமைப்புடன் கூடிய இலகு ரக வாகனத்தை தனது சொந்த செலவில் வழங்க முன்வந்தாா். இந்த வாகனத்தை மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா் ஆகியோரிடம் ஒப்படைத்தாா்.

இந்த நிகழ்வில், மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.