முகப்பு
மதுரை

மதுரை அறிவுரைக் குழுமத்துக்கான அலுவலகக் கட்டடம் திறப்பு

மதுரையில் அறிவுரைக் குழுமத்துக்கான அலுவலகக் கட்டடம் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:30 AM
மதுரை குதிரைப் பந்தய குடியிருப்பில் புதிதாகக் கட்டப்பட்ட அறிவுரைக் குழுமத்துக்கான அலுவலகக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமைச்சா் பி. மூா்த்தி. உடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அருணாஜெகதீசன், எஸ். பாஸ்கரன், எஸ். ஆனந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:59 PM

மதுரையில் அறிவுரைக் குழுமத்துக்கான அலுவலகக் கட்டடம் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், குற்றவாளிகளை தடுப்புக் காவலில் வைக்கும் ஆணைகள் தொடா்பான வழக்குகளை அந்தச் சட்டப் பிரிவு 9-இன் படி, சென்னையில் உள்ள அறிவுரைக் குழுமம் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், மதுரையில் அறிவுரைக் குழுமம் 1.08.2025 முதல் செயல்பட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு தற்காலிகக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, மதுரை குதிரைப் பந்தய குடியிருப்பில் ரூ. 1.45 கோடியில் இந்த அறிவுரைக் குழுமத்துக்கென தனி அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டது.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:44 PM

இந்தக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தாா்.

இதையொட்டி, மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி கலந்து கொண்டு, இந்த அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

இந்த நிகழ்வில் மதுரை அறிவுரைக் குழுமத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான அருணா ஜெகதீசன், உறுப்பினா்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ். பாஸ்கரன், எஸ். ஆனந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி (மதுரை வடக்கு), மு. பூமிநாதன்( மதுரை தெற்கு), அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.