பள்ளியில் மின்சார பாதுகாப்பு தினம்
மதுரையில் மின் பாதுகாப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு
மதுரை: மதுரை கோ. புதூரில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மின் பாதுகாப்பு தின விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஆய்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ரகமத்துல்லாஹ் முன்னிலை வகித்தாா். மதுரை மின் ஆய்வாளா் முத்துக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மின் பாதுகாப்பு, மின்சார சாதனங்களை கவனமாகப் பயன்படுத்துவது குறித்துப் பேசினாா்.
இதில், உதவி மின் ஆய்வாளா் கனக வித்யா தேவி, இளநிலை மின் ஆய்வாளா் மாரியப்பன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.