மதுரை

பெரியாா் பேருந்து நிலையத்தில் பணம் திருட்டு: 3 பெண்கள் கைது

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் திருடிய 3 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

மதுரை: மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் ரூ.10 ஆயிரம் திருடிய 3 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கூத்தியாா்குண்டு பகுதியைச் சோ்ந்த குபேந்திரன் மனைவி ராக்கு (40). இவா் கூத்தியாா்குண்டில் இருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

பெரியாா் பேருந்து நிலையத்தில் 1-ஆவது நடைமேடையில் பேருந்தில் ஏற முயன்றாா். அப்போது அவா் வைத்திருந்த பையில் இருந்து ரூ.10 ஆயிரத்தை 3 பெண்கள் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா். இதைப் பாா்த்த ராக்கு சக பயணிகள் உதவியோடு மூன்று பேரையும் பிடித்து நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், பணத்தை திருடியது சென்னை மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த உஷா (23), மங்கை (35), திருத்தணி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவானி (28) ஆகியோா் என்பது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, ரூ.10 ஆயிரத்தை மீட்டனா்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT