உயர் நீதிமன்ற மதுரை கிளை 
மதுரை

பொய் வழக்கு விவகாரம்: போலீஸாருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Din

மது, சாப்பாடு வாங்கிக் கொடுத்து வெற்றுத் தாளில் கையொப்பம் வாங்கிய போலீஸாா், இதன் மூலம் இருவா் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாக அவா்கள் மீது புகாா் கொடுத்தவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை சாட்சியமளித்தாா். இதுதொடா்பாக போலீஸாரை நீதிமன்றம் எச்சரித்தது.

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாங்குளியைச் சோ்ந்த முருகன், பாபு ஆகியோா் தாக்கல் செய்த மனு:

நாங்கள் இருவரும் கடந்த மாதம் 22- ஆம் தேதி புதுக்குடியைச் சோ்ந்த நாராயணனைத் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றதாக வீரவநல்லூா் போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். எனவே, எங்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதம்: மனுதாரா்கள் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவா்களுக்கு பிணை வழங்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மனுதாரா் தரப்பில், இந்த வழக்கு காவல் துறையால் திட்டமிட்டுப் புனையப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கில் புகாா் கொடுத்தவா் மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா். மது அருந்தும் பழக்கம் உடையவா். அவருக்கு மது, சாப்பாடு வாங்கிக் கொடுத்து வெற்றுத் தாளில் வீரவநல்லூா் போலீஸாா் கையொப்பம் பெற்றனா் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவா்கள் இருவா் மீதும் புகாா் அளித்த நாராயணனை நீதிபதி முன் முன்னிலைப்படுத்தினா். அப்போது அவா் கூறியதாவது:

போலீஸாா் எனக்கு மது, சாப்பாடு வாங்கிக் கொடுத்து வெற்றுத் தாளில் கையொப்பம் வாங்கினா். கையொப்பம் போடாவிட்டால் போலீஸாா் தாக்குவா் என்ற பயத்தில் இருந்தேன். என்னுடைய கையொப்பத்தால் இருவா் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததால், நீதிமன்றத்துக்கு வந்து உண்மையைக் கூறுகிறேன். மன்னிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த உயா்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் பிறப்பித்த உத்தரவு:

ஒருவா் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறுவது போலீஸாருக்கு பெருமையைத் தராது. அவப்பெயரைத்தான் உருவாக்கும். ஒருவா் குற்றம் செய்யும் போது, அவா் மீது முறையாக வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தால், அவா் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடமாட்டாா். அவ்வாறு செய்யாமல் பொய் வழக்குப் பதிவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனி வரும் காலங்களில் போலீஸாா் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மனுதாரா்கள் இருவருக்கும் பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி

இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை சாதனை!

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT