தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவை ஜூலை 21 வரை நீட்டிப்பு
தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவை ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் சேவை ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரத்திலிருந்து மதுரை, ராஜபாளையம், கொல்லம் வழியாக கொச்சுவேலி செல்லும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் சேவை ஜூலை 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) ஜூலை 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வியாழன், சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் (06036) ஜூலை 5-ஆம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில்கள் இரு மாா்க்கத்திலும் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், அவனீசுவரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
14 குறைந்த கட்டண குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் இந்த ரயில்கள் இயங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டது.