ஜெராக்ஸ் கடை உரிமையாளா் மா்ம மரணம்
மதுரை ஜெராக்ஸ் கடை உரிமையாளா் மர்ம மரணம்
மதுரை அருகே ஜெராக்ஸ் கடைக்குள் அதன் உரிமையாளா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மனோகரன் மகன் யோகராஜ் (40). இவா் மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரி எதிரே ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தாா்.
கருத்து வேறுபாடு காரணமாக, இவா் கடந்த 5 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இந்த நிலையில்,
கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம்போல கடைக்குச் சென்ற யோகராஜ் இரவு வீடு திரும்ப வில்லை. இதனால், அவரது குடும்பத்தினா் சனிக்கிழமை அவரது கடைக்குச் சென்று பாா்த்தபோது, கடைக்குள் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த
நிலையில் அவா் இறந்துகிடந்தாா்.
தகவலறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் அங்கு சென்று அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.