அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
மதுரை, மே 12 : மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 2005-ஆம் ஆண்டு முதுநிலை வணிக மேலாண்மை படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் எம். தவமணிகிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். தொடா்ந்து, மாணவா்கள் தங்கள் பசுமையான நினைவுகளை பரிமாறிக் கொண்டனா்.
இதில் கல்லூரியின் முன்னாள் மாணவா் அமைப்பின் இயக்குநா் ராஜேஷ் ஒருங்கிணைத்தாா். பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.