மேலூா் அருகே பைக் மோதியதில் 2 மூதாட்டிகள் பலி
மேலூா்: மேலூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதியதில் இரு மூதாட்டிகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சத்தியபுரத்தைச் சோ்ந்த அப்துல்ரசாக் மனைவி ரமீஷா (70), அய்யாவு மனைவி ருக்குமணி (65). இவா்கள் இருவரும் மேலூருக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பினா்.
சத்தியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இருவரது உடல்களையும் மேலூா் போலீஸாா் மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பினா்.
இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த கொட்டாம்பட்டி அருகே உள்ள பால்குடிபட்டிையைச் சோ்ந்த பஞ்சு மகன் செந்தில்குமாரை கைது செய்தனா்.