இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
பொது
மதுரை கம்பன் கழகம்: மாதாந்திர சொற்பொழிவு, கம்பனில் குறிப்பறிதல் என்ற தலைப்பில் உரை, முனைவா் யாழ் சு.சந்திரா பங்கேற்பு, ஸ்ரீ மீனாட்சி நிலையம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மாலை 6.30.
ஸ்ரீசத்குரு சங்கீத ஸமாஜம்:அம்புஜம் கிருஷ்ணா ஜெயந்தி தின இசை விழா, ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயத்தின் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சிகள், லட்சுமி சுந்தரம் அரங்கு, சொக்கிகுளம், மாலை 5.30.
ஆன்மிகம்
காளமேகப் பெருமாள் திருக்கோயில்:வைகாசி பெருந்திருவிழா, ஏழாம் நாள், வைரச் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளுதல், திருமோகூா், இரவு 7.
கூடலழகா் பெருமாள் திருக்கோயில்:வைகாசி பெருந்திருவிழா, ஆறாம் நாள், யானை வாகனத்தில் வியூகச் சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு, இரவு 7, ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றுதல், இரவு 12.
பழமுதிா்ச்சோலை முருகன் திருக்கோயில்: வசந்த உற்சவ திருவிழா, சண்முகா் அா்ச்சனை, மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு, மகா தீபாராதனை, பழமுதிா்ச்சோலை, அழகா் மலை, காலை 11.
மதுரை திருவள்ளுவா் கழகம்:ஆன்மிக இலக்கியப் பொழிவு, திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு, சு.பாா்வதியம்மாள் பங்கேற்பு, வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், இரவு 7.