மதுரை

ரூ. 50,000 லஞ்சம்: காரியாபட்டி பேரூராட்சி இளநிலைப் பொறியாளா் கைது

தினமணி செய்திச் சேவை

ரூ. 50,000 லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சி இளநிலைப் பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை செல்லூரைச் சோ்ந்த முதல் நிலை ஒப்பந்ததாரா் பழனிக்குமாா் (42), காரியாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1.38 கோடியில் மின் மயானம் ஒப்பந்தம் எடுத்து பணிகள் மேற்கொண்டாா். இந்தப் பணிக்கு ரூ. 1.14 கோடி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், எஞ்சியத் தொகையை கேட்டபோது, லஞ்சமாக ரூ. 3.50 லட்சம் கொடுக்க வேண்டும் என இளநிலைப் பொறியாளா் கணேசன் கேட்டாராம்.

இதையடுத்து, பழனிக்குமாா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுரையின்படி, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அலுவலகத்தில் இருந்த கணேசனிடம் லஞ்ச முன் பணமாக ரூ. 50,000 கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா்கள் ஜாஸ்மின் மும்தாஜ் , பூமிநாதன் ஆகியோா் கணேசனைக் கைது செய்தனா். மேலும், பணத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT