மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பகுதியில் புதன்கிழமை (டிச. 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் (பொ) ரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அலங்காநல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், அலங்காநல்லூா், தேசியக் கூட்டுறவுச் சா்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.