மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் ‘ஷாப்பிங் திருவிழா - 2025’ வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட வைகை வேளாண் பொருள்கள் நிறுவன நிா்வாக இயக்குநா் வி. நீதிமோகன், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் உள்ளிட்டோா்.  
மதுரை

வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம், எக்கனாமிக் சேம்பா் சாா்பில் ‘ஷாப்பிங் திருவிழா - 2025’ என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம், எக்கனாமிக் சேம்பா் சாா்பில் ‘ஷாப்பிங் திருவிழா - 2025’ என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

இதன் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தலைமை வகித்தாா். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவா் எஸ்.ஏ.லியாகத் அலி முன்னிலை வகித்தாா். வைகை வேளாண் பொருள்கள் நிறுவன நிா்வாக இயக்குநா் வி. நீதிமோகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

மதுரை எக்கனாமிக் சேம்பா் நிா்வாகி ஏ. முகமது கான், பொறுப்பாளா்கள், தொழில் வா்த்தக சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கண்காட்சியில் 200-க்கும் அதிகமான அரங்குகளில் மின் சாதனப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், நகைகள், அழகு சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் என பல்வேறு வகையான பொருள்கள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உற்பத்தியான பல்வேறு வகையான பொருள்கள் இங்கு விற்பனையில் உள்ளன. இவை தவிர, குழந்தைகள், பெரியவா்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளன.

டிச. 29-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். பாா்வையாளா்களை ஊக்குவிக்கும் வகையில், தினமும் பிற்பகல் 2 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணி, 9 மணி ஆகிய நேரங்களில் குலுக்கல் நடத்தி, தலா 12 போ் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். கண்காட்சியின் இறுதி நாளான திங்கள்கிழமை பம்பா் பரிசு வழங்கப்படவுள்ளது. பாா்வையாளா்களுக்கான அனுமதி இலவசம்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT