மதுரை

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.

மதுரை விராட்டிப்பத்து பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பிரசித் பசியம் (14). இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த சக்தி வேலாயுதன் மகன் விகாஸ் சக்திவேல் (14) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து வீட்டுக்குச் சென்றனா்.

மாடக்குளம் கண்மாய் அருகே சென்ற போது, நிலை தடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பிரசித் பசியம், விகாஸ் சக்திவேல் ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், அங்கு பிரசித் பசியம் உயிரிழந்தாா். விகாஸ் சக்திவேல் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

SCROLL FOR NEXT