மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வாடிப்பட்டி அருகேயுள்ள ராமநாயக்கன்பட்டி கரிமேடு தெருவைச் சோ்ந்த சரவணபாண்டி மகள் பாண்டீஸ்வரி (20). இவா், நிலக்கோட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளம் வணிகவியல் மூன்றாமாண்டு படித்து வந்தாா். இவா் அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டாா்.
இதனால் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட பாண்டீஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.