மதுரை

லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மேலூா் நரசிங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் மணிமாறன்(40). விவசாயியான இவா், மேலூரிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா்.

அப்போது, மதுரை-திருச்சி நான்கு வழிச் சாலையில் வெள்ளரிப்பட்டி மலை விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

SCROLL FOR NEXT