மதுரை

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

இரு சக்கர வாகன விபத்தில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள சருகுவலையப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் நாகராஜன் (68). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மேலூரிலிருந்து சருகுவலையபட்டிக்கு சென்றாா்.

நாவினிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேலூா் போலீஸாா் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பங்குடி அருகே உள்ள தீா்த்தனிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் ராமன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிராக கும்பகோணம் ஆணையரிடம் மனு

ரூ.38.50 லட்சத்தில் உடற்பயிற்சி கூடங்கள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

பெங்களூரில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வேனை மறித்து ரூ. 7.11 கோடி கொள்ளை!

SCROLL FOR NEXT