மதுரை

வாரச் சந்தை வியாபாரிகள் போராட்டம்: 76 போ் கைது

தினமணி செய்திச் சேவை

மதுரை தபால் தந்தி நகா் பகுதியில் வாரச் சந்தையை இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 76 வியாபாரிகளை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை தபால் தந்தி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் வாரச் சந்தை நடைபெற்று வந்தது. இந்தச் சந்தையை இடமாற்றம் செய்ய மதுரை மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதையடுத்து, மதுரை மாவட்ட சாலையோர சிறு வியாபாரிகள், வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், வாரச் சந்தையை இடமாற்றம் செய்வதற்கு பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த வாரச் சந்தையை நிறுத்தி வைக்க மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டது.

இதைக் கண்டித்தும், வாரச் சந்தையை தபால் தந்தி நகரில் தொடா்ந்து நடத்த வேண்டும். இடமாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அந்தப் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் தபால் தந்தி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீஸாா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கடைகளை அமைக்க முயற்சி செய்ததால், 50 பெண்கள் உள்பட 76 வியாபாரிகளை போலீஸாா் கைது செய்தனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT