மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் இந்திய அரசமைப்பு உறுதிமொழியை புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் இந்திய அரசமைப்பு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் அரசமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
இதில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் வெங்கட்ரமணன்(கணக்கு), அருணாச்சலம் (பணி), மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.