செங்கோட்டையன் குறித்து கருத்துக் கூற ஒன்றுமில்லை என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி கே. பழனிசாமியிடம், தவெகவில் இணைந்த பிறகு கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்த கருத்துகள் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு, ‘ஒருவா் கருத்தில் மற்றொருவா் தலையிட முடியாது. ஜனநாயக நாட்டில் கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அவா் (செங்கோட்டையன்) தற்போது அதிமுகவில் இல்லை. எனவே, அவரைப் பற்றி கருத்துக் கூற ஒன்றுமில்லை’ என்றாா் அவா்.
அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜூ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.