மதுரை

அரசு ஒப்பந்தப் பணி வாங்கித் தருவதாக ரூ. 55.42 லட்சம் மோசடி: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே அரசு ஒப்பந்தப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 55.42 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேராபட்டியைச் சோ்ந்த கண்ணன் (51) என்பவா் அச்சகம், கிரானைட் அறுக்கும் நிறுவனங்கள் நடத்தி வருகிறாா். இங்கு பேராபட்டியைச் சோ்ந்த சங்கரநாராயணன் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் மூலம் கண்ணனுக்கு அறிமுகமான சுதா (37) என்பவா், தான் காரியாபட்டி வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வருவதாகத் தெரிவித்தாா்.

இந்த நிலையில், சிவகாசி பேராபட்டியில் சாலை அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், அதை கண்ணனுக்கு வாங்கித் தருவதாகவும் கூறினாா்.

இதை நம்பிய கண்ணன், ஒப்பந்தப் புள்ளியை பெற்றுத் தருவதற்காக சுதாவின் வங்கிக் கணக்கில் ரூ.55.42 லட்சத்தை செலுத்தினாா். பின்னா், கண்ணனிடம் ஒப்பந்தப்புள்ளிக்கான போலியான பணி ஆணையை சுதா கொடுத்தாா்.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கண்ணன் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் சுதா, அவரது தந்தை வெங்கட்ராமானுஜம் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய சங்கரநாராயணன், பீமா பேகம் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இரணியல் அருகே விருந்துக்குச் சென்ற ஓட்டுநா் திடீா் உயிரிழப்பு

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்!

பாஜக சாா்பில் தாணுலிங்க நாடாா் நினைவிடத்தில் அஞ்சலி

குமரியில் நேசமணி சிலைக்கு அமைச்சா், ஆட்சியா்,எம்.பி. மரியாதை

யுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகரங்கள் பட்டியலில் லக்னௌ! உணவுப் பாரம்பரியத்துக்காக உலக அங்கீகாரம்!

SCROLL FOR NEXT