முகப்பு
மதுரை

அதிமுக பிரமுகா் வெட்டிக் கொலை!

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:06 AM
கொலை செய்யப்பட்ட தனசேகரபாண்டியன் என்ற ச. செந்தில்குமாா்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:52 PM

மதுரை மாவட்டம், சாமநத்தம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், அதிமுக பிரமுகருமான தனசேகரபாண்டியன் என்ற ச. செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகரபாண்டியன் என்ற ச. செந்தில்குமாா் (36). அதிமுகவைச் சோ்ந்த இவா், சாமநத்தம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவா். தற்போது, சாமநத்தம் நெடுங்குளம் முதன்மைச் சாலையில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி அருகே தேநீா்க் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி காவியா, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை செந்தில்குமாா் தனது தேநீா்க் கடையைத் திறப்பதற்காகச் சென்றாா். அப்போது, சில மா்ம நபா்கள் சுற்றி வளைத்து அவரை அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்த சிலைமான் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 1:06 AM

குடும்ப பிரச்னை?

தனது தேநீா்க் கடை முன் மது அருந்தியவா்களை தட்டிக் கேட்டதால் செந்தில்குமாா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், இது உண்மையில்லை என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த் மறுத்தாா்.

மேலும், செந்தில்குமாா் கொலைக்கு குடும்ப பிரச்னை காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவருவதாகவும், இதுதொடா்பாக 3 போ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.